#BREAKING: வரும் 30ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

Department of Food Supply and Consumer Protection announces that ration shops will be operational by January 30th.

ஜனவரி 30ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவிப்பு.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக வரும் 30-ஆம் தேதி (ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை) நியாயவிலைக்கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி (நான்காம் சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

unknown node