“கல்வியை பாதியில் கைவிடக்கூடாது, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்” – மு.க.ஸ்டாலின் உறுதி.!

எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

CM MK Stalin

சென்னை :தமிழ்நாட்டுக்கான மாநில பள்ளி கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைசார் மு.க.ஸ்டாலின். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளது.

பள்ளிக்கல்வி வரலாற்றிலேயே இந்த  மாநில கல்விக்கொள்கை வெளியீட்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க இல்லம் தேடி கல்வி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புது உற்சாகம் பிறக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் தங்கள் மாணவர்களுக்கு இப்படி ஒரு பாராட்டு விழா நடத்தப்படுவதில்லை.

அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம். கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்த மாணவர் எண்ணிக்கை இவ்வாண்டு இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.

எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக் கூடாது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம். உங்கள் வயதில் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம், நன்றாக படித்து சாதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் மாறலாம். அப்படி எடுத்துக்காட்டாய் மாறியிருக்கிற உங்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம். இந்த ஆண்டு 75% மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர், இது 100%-ஆக உயர வேண்டும். நீங்கள் தான் ரியல் ஹீரோ…உங்களை தூக்கி வைத்து கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது, சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கம்” என்று கூறியுள்ளார்.