திமுகவின் "இதயங்களை இணைப்போம்" மாநாடு – அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார்.!

AIMIM leader Asaduddin Owaisi is participating in the DMK's Let's Connect Hearts' conference to be held in Chennai.

திமுகவின் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார்.

ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்இதயங்களை இணைப்போம்மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவின் மாநாட்டுக்கு வர அசாதுதீன் ஓவைசி அழைப்பை ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே,தமிழகம் மீட்போம்என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சார மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கிராமங்களுக்கு சென்றுஅதிமுகவை நிராகரிப்போம்என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது, இதயங்களை இணைப்போம் என்ற மாநாட்டை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.