மதுரை :மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாடு தொடர்பாக அமைச்சர் பி. மூர்த்தி அளித்த பேட்டியில், தவெக மாநாட்டிற்கு திமுக எந்த இடையூறும் செய்யவில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அதாவது ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மதுரை மாநாட்டில், அமைச்சர் மூர்த்தி மாநாட்டிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “இந்த மதுரை மாநாட்டிற்கு எத்தனை தடைகள் உருவாக்கினார்கள் தெரியுமா? அத்தனை தடைகளையும் உடைத்து இங்கு நின்று கொண்டிருக்கிறோம்,” என்று பகிரங்கமாகப் பேசினார். மேலும், இந்தத் தடைகளை மீறி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தொண்டர்களின் ஆதரவு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், “இது திமுக, ஜல்சா கட்சி கிடையாது, இப்படிப்பட்ட சில்லத்தனமான வேலைகளை திமுக செய்யாது” என்று கூறி, தவெகவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
சில்லித்தனமான வேலைகளை எல்லாம் திமுக செய்யாது. எதிரிக்கு கூட நாங்களோ, எங்கள் முதல்-அமைச்சரோ அந்த மாதிரி வேலைகளை செய்வதில்லை. சேர் கொடுக்கக்கூடாது போன்றவற்றை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தொண்டன் கூட அதனை செய்ய மாட்டார்” என்றார்.
