7 பேரை விடுவிக்க திமுக ஆர்வம் காட்டவில்லை – சீமான் குற்றச்சாட்டு!

Seaman insists action must be taken to release Islamists imprisoned for more than 20 years.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய ஆர்வத்தை தற்போது திமுக அரசு காட்டவில்லை என குற்றசாட்டினார்.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.