தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.!

திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே , நேற்று  நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அழைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நீலகிரி , கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.