சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. […]
திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய 6 இளைஞர்கள் வேலை தேடி இந்தியா வந்துள்ளனர். மேலும், இவர்கள் 6 பேரும் கவுகாத்தி வழியாக திருப்பூருக்கும் வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 6 இளைஞர்களும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி கூலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்த்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்,நேற்று அந்த இளைஞர்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு […]
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஒட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது மலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி ஸ்டியரிங்கில் மயங்கி […]
திருப்பூர்: இன்ஸ்டாவில் 17 வயது சிறுவனை காதலித்த 15 வயது சிறுமி நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி சமூக ஆப்பான இன்ஸ்டா மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று பேசி வந்திருக்கிறார். அதன் பின் இருவரும் இன்ஸ்டாவில் தங்களது காதலை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமியிடம் ‘ஐபோன் வாங்கி தா’ என்று கேட்டுருக்கிறார். […]
மக்களவை தேர்தல் : நாடளுமன்ற தேர்தல் வாக்கு எணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக 39 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், திருப்பூர் மற்றும் நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி, திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட கே.சுப்பிரமணியன் 1,20,290 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக அதிமுக சார்பாக போட்டியிட்ட பி.அருணாச்சலம் 88,299 வாக்குகள் பெற்று 31,991 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். […]
நூல் விலை ஏற்றம், மின் கட்ட டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வால் கொங்கு மண்டல பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர […]
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனு மீது திருப்பூர் ஆட்சியர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே […]
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று நெல்லை, […]
ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட […]
மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை. திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது […]
இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் […]
திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்கொரோனா வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து, சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்து கடை தவிர பிற கடைகள் மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்கும் என […]
திருப்பூரில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வந்த நிலையில், அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை, அங்கு சோதனை நடத்தினார்கள். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட போதை சாக்லேட், குவியல் […]
கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களாக […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து நிறுவனங்களும் முடவுள்ளதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி பெயர் உமா தேவி. இவர்கள் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வீட்டின் அருகேதவறி விழுந்து இறந்துவிட்டார் என வெங்கடேஷ் மனைவி உமாதேவி கூறியுள்ளார். உடனே அவரது உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத […]