சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின் ஆய்வு முடிவில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு , பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்ததாக கூறப்பட்டது. கோயில் பிரசாத லட்டுகளில் விலங்குகளின் மாமிச கொழுப்புகள் கலந்ததாக எழுந்த குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி அண்மையில் ஒரு […]
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததாக உணவுப்பொருள் ஆய்வுக்குழு கூறி முதலமைச்சரின் குற்றசாட்டை உறுதிப்படுத்தியது. திருப்பதி கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்ததாக கூறப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. மேலும், நேற்று திருப்பதி தேவஸ்தானம் […]
பழனி : இரண்டாம் நாளாக களைகட்டும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் இரண்டாவது இன்றும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அறநிலையத்துமுத்தமிழ் முருகன்றை அதிகாரிகள், நீதியரசர்கள், சமயப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், ஆன்மீக அன்பர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள், முருக பக்தர்கள் கழகத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, […]
சென்னை : தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து “முத்தமிழ் முருகன் மாநாடு” துவக்க நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்துக் கடவுள் முருகனின் 3ஆம் அறுபடை வீடு அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனியில் “முத்தமிழ் முருகன் மாநாடு” இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சிவகங்கை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் உதயநிதி ஸ்டாலின் சென்று காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும், அவரே, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். மேலும், கல்வி அதிகாரிகளிடம் பள்ளி […]
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து தீ பிடித்தது. சமபவ இடத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இன்று திண்டுக்கல் , ஓட்டன்சத்திரம் அருகே மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அரசு பேருந்து மீது மோதியது. விபரீதமாக பேருந்தின் டீசல் டேங்க் இருக்கும் பக்கம் […]
நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திண்டுக்கல்லில் புகழ் பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழா தொடங்கி இன்று தீர்த்தங்கள் கொண்டுவரும் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. இதில் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். நாளை குடமுழுக்கு (கும்பாபிஷேசகம்) திருவிழா நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நாளை (07-09-2022) உள்ளூர் […]
திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று நெல்லை, […]