கரூர் :கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்திக்க முடிவு செய்துள்ளார் .அதன்படி , கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடனே கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
இதனிடையே ஆதவ் அர்ஜுனா, “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த 24 மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.
மரணத்தின் வலியை 5 வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்தபோதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும். இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உறவாக எனது வாழ்க்கை பயணம் இருக்கும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என கூறியுள்ளார்.
unknown node