ஜெர்மனி பயணம் முடிந்து லண்டன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.!

ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Stalin In Europe

லண்டன் :புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, லண்டனில் முக்கிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.

இந்தப் பயணம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அரசு முறை பயணமாகும். முன்னதாக, ஜெர்மனியில், அவர் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து ரூ.3,201 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார், இதன் மூலம் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (செப்டம்பர் 4)  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொண்டு, தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைக்க உள்ளார். பின்னர், செப்டம்பர் 6 அன்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்கிறார்.

இந்தப் பயணத்தை முடித்துவிட்டு, செப்டம்பர் 7 அன்று லண்டனிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 8 அன்று சென்னை திரும்ப உள்ளார். இந்நிலையில், லண்டன் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”இங்கிலாந்தில் கால் வைத்ததும், நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன், தொலைதூரக் கரைகளுக்கு அப்பாலும் வீட்டின் நறுமணத்தை எடுத்துச் சென்ற வரவேற்பு அளித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node