வாஷிங்டன் :அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலில் உக்ரைனில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென டிரம்ப் கேட்டுக்கொண்டார். கடந்த பிப்ரவரி 2022 ஆண்டு முதல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர், இன்னும் ஓயாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில், ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிது குறிப்பிடத்தக்கது. இதனால், பல நாடுகள் இந்த இரு நாடுகளுக்குயிடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்தையில் ஈடுபட்டு […]
பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தி அங்கீகரித்துள்ளது பெல்ஜியம் அரசு. அந்நாட்டு அரசு கடந்த வார வெள்ளிக்கிழமை இதனை அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் 93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவின் […]
ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]
இங்கிலாந்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.ரயில் செல்லும் பாதைகளில் தீப்பிடித்து, சில விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. தீவிர சிவப்புவெப்ப எச்சரிக்கை காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் தீவிர சிவப்பு வெப்ப எச்சரிக்கை இருப்பதால் ரயில்கள் பெரும்பாலும் 90 மைல் வேகத்தில் 100 மைல் அல்லது 125 மைல் வேகத்தில் மட்டுமே இயங்கும் என்று […]
ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து. ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது. இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள […]
உக்ரைனுக்கு போா் விமானங்களை அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு. ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது.ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்போது, பல்வேறு நாடுகள் கண்டங்கள் தெரிவித்து, பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுதங்கள், டாங்கிகள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை பல நாடுகள் வழங்கி வருகிறது. உலகப்போருக்கு […]
உலகில் ஐரோப்பாவை தவிர எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது என WHO தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக அளவில் ஐரோப்பாவில் தான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், உலக அளவில் சுமார் 3.1 மில்லியன் கொரோனா வழக்குகள் இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஐரோப்பிய பகுதிகளில் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ், தற்பொழுது ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் இந்த உருமாறிய வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார […]
மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மேற்கு ஐரோப்பாவில் பலத்த மழை மற்றும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு மற்றும் காயங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மோசமான வானிலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் மாநிலங்களில் அதிகரித்து வரும் நீர், நிலச்சரிவுகள் மற்றும் மின் தடைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. […]
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை. மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஜெர்மனி மற்றும் இதன் அருகில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பல வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். […]
5,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் பிளேக் தொற்று ஏற்பட்ட நபரின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் 1347 ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டு வரை கொடிய நோயான பிளேக் நோயால் பல லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர் என பிரிட்டானிக்கா இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தீவிர நோய்த்தொற்றால் ஐரோப்பாவின் மக்கள் தொகையில் பாதி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய நோய் பல நூற்றாண்டுகளாக பரவி வந்து அப்போது இருக்கும் மக்களை கொன்று குவித்துள்ளது. ஐரோப்பாவில் […]
தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் ஐரோப்பா நாட்டில் தொடங்கவுள்ளதாக தகவல். நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை நேற்று சன் […]
கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்தது. முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணாக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் நோயானது உலக அளவில், 1,853,168 பேரை பாதித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால், 114,248 பேர் உலக அளவில் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 80 […]
குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்டலுசியன் (Andalusian) நகரில் […]
இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான […]
உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம் இன்று 21 மார்ச், 1916 -பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கமருதீன். குழந்தையைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் […]
இதுவரை 55 பேர் ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக, உயிரிழந்தனர். அந்த கண்டம் முழுவதும் மைனஸ் 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவான பருவநிலை நிலவுவதால், பனிப்பொழிவு மோசமாக காணப்படுகிறது. பனிக்கட்டிகள் தேங்கி நெடுஞ்சாலைகள் மூடப் பட்டிருப்பதால், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகளும் முடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. மோசமான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு, போலந்து நாட்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசு, லிதுவேனியா, பிரான்ஸ், […]
ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பருவநிலை மாற்றத்தால் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ஒருவர் மீது மற்றொருவர் எரிந்து விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர். ரஷ்யாவில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவில் சாலையில் […]