மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!
மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநில அரசுகளும் தொலைத்தொடர்பு , தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றனர்.
ஆனால் தற்போது, இவை அனைத்தையும், மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனவும் , தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை மாநில அரசுகள் நடத்த தடை எனவும் உத்தரவு வெளியாகி உள்ளதாம்.
ஆதலால் இனி, தமிழக கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகியவை மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என கூறப்படுகிறது.