தலைமை தொழில்நுட்ப அதிகாரி இல்லாமல் டெண்டர் விட கூடாது என கல்வி தொலைக்காட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு உபயோகப்படும் வகையில் அரசால் நடத்தப்பட்டு வரும் டிவி சேனல் கல்வி தொலைக்காட்சி. இதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகின்றன. கல்வி தொலைக்காட்சிகாக தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருந்தது. இதற்கு தடைகேட்டு, மணிகண்ட பூபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது, கல்வி தொலைக்காட்சியில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்ற ஒருவர் […]
மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநில அரசுகளும் தொலைத்தொடர்பு , தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றனர். ஆனால் தற்போது, இவை அனைத்தையும், மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் […]
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியானது இன்று தொடங்கப்படுகிறது தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும் தமிழக அரசு சார்பாக கல்வி என்ற தொலைக்காட்சியை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி தொலைக்காட்சிக்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் சுமார் 5 கோடி செலவில் இதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு அரைமணி […]