டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி […]
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி அளிப்போம் என மத்திய அமைச்சர் கூறியதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், ” தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிலுவை இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய ரூ.2,151 கோடி தொகை நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசு குறிப்பிடும் […]
பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]
ஹைதராபாத்: IRS அதிகாரி எம்.அனுசுயாவின் கோரிக்கையை ஏற்று அவரது பெயரை அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை ஆணாகவும் மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய குடிமைப் பணிகளில் முதல்முறையாக, ஹைதராபாத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட IRS அதிகாரியின் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது நிதியமைச்சகம். எம்.அனுசுயா என்ற பெயர் எம்.அனுகதிர் என மாற்றப்பட்டு, பெண் பாலினத்தில் இருந்து ஆணாக மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் ஒரு […]
டெல்லி: தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும். இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை […]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை சார்ப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், கடந்த 2021 – 2022 வரவு செலவு கணக்கீட்டில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு 63,846 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என […]
Z Security: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு. நாடு முழுவதும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கான அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் […]
TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
EV policy : மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More- கிளாசிக் விரும்பிகளே ரெடியா? விரைவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650…வெளியான புதிய தகவல்! பல்வேறு முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரி கார், பைக் என புதிய புதிய மாடல்களை சந்தையில் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுசூழல் […]
Indian citizenship : இந்திய குடியுரிமை கோரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அகதிகளுக்காக பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு […]
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]
Excavation materials : தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொண்டார். அப்போது, அகழாய்வு பணியில் 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. Read More – ஓபிஎஸ்க்கு அதிகாரம் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. திடிரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீ ராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தலைமையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 […]
விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]
நாடு முழுவதும் வரத்து குறைந்ததால் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் 15% அளவுக்கு அரிசி விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சமாளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாரத் அரிசி என்ற பெயரில் ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, ‘பாரத் அட்டா’வை கிலோ ஒன்றுக்கு 27.50 ரூபாய்க்கும், ‘பாரத் […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]
இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சுமார் 5 கோடி மக்களை மட்டுமே கொண்ட சிறிய நாடு தான் மியான்மர். இதனால் சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுடன் மியான்மர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த சூழலில், மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பல நூறு […]
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க தமிழகம் முயற்சி எடுத்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி இது குறித்து பேசிய பாஜக […]
லட்சத்தீவின் தென்கோடியில் உள்ள மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா (மத்திய அரசு) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லட்சத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கவரட்டியில் சுமார் ரூ.1150 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதுபோன்று நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன்பின் பிரதமர் கூறியதாவது, லட்சத்தீவின் நிலப்பரப்பளவு சிறியதாக […]
நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமுமில்லை என்றும் தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி வழங்கி உள்ளோம் எனவும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதில் அளித்திருந்தார். அமைச்சர் கூறியாதவது, தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு […]