WhatsApp : +92 இல் தொடங்கும் நம்பர்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு துறை (DoT) பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடி நடப்பது குறித்த ஆலோசனைகளை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில், சைபர் […]
TN Govt: வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு. கடந்தாண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மிதந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் வாழ்வாதாரம் […]
EV policy : மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கான கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More- கிளாசிக் விரும்பிகளே ரெடியா? விரைவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650…வெளியான புதிய தகவல்! பல்வேறு முன்னணி நிறுவனங்கள், எலெக்ட்ரி கார், பைக் என புதிய புதிய மாடல்களை சந்தையில் வெளியிட்டு வருகின்றனர். சுற்றுசூழல் […]
Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. […]
Madurai AIIMS : 5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது மத்திய அரசு. கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். Read More – […]
Excavation materials : தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொண்டார். அப்போது, அகழாய்வு பணியில் 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. Read More – ஓபிஎஸ்க்கு அதிகாரம் […]
Union Cabinet approved : உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். Read […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணியின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. திடிரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீ ராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது தலைமையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 […]
ஜூலை 1ம் தேதி முதல் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா அதிநியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்றும் மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் […]
உக்ரைனுக்கு எதிரான போரில் போரிட ஒரு சில இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, இந்த போரில் இருந்து விலகி இருங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் எல்லை பகுதிகள் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகின்றனர். மாறி […]
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன்படி கரும்பு குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். இதனால் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு […]
விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், […]
2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது. இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி […]
மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 10-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்” புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள்வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது. புதுச்சேரியை […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய படஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம், தொடர்ந்து 5வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பெருமையை பெறப் போகிறார். நடப்பாண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இது முழுமையான பட்ஜெட்டாக இருக்காது. தேர்தல் முடிந்து ஆட்சி பொறுப்பேற்கும் அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். அந்த வகையில், மே 2024க்கு பின்னர் […]
இந்தியாவுக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சுமார் 5 கோடி மக்களை மட்டுமே கொண்ட சிறிய நாடு தான் மியான்மர். இதனால் சீனா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுடன் மியான்மர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த சூழலில், மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால் பல நூறு […]
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்திய மொழிகளில் ஒவ்வொரு பாடத்தையும் (Study Material ) டிஜிட்டல் முறையில் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் பள்ளி மற்றும் உயர்கல்வியின் கீழ் உள்ள அனைத்து படிப்புகளுக்கான (Study Material )பாடத்தையும் டிஜிட்டல் முறை கிடைக்கச் செய்ய மத்திய […]