அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகள் ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம்

Featured image

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி 2ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போராட்டம் நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட காரணமாக இருந்ததாகவும் கூறி, கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 11 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயக முறையில் நடைபெற்ற கூட்டத்தை சட்டவிரோதமாக கூடிய குற்றமாக கருத முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அத்துடன், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேர் உட்பட 11 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.