அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜனவரி 2ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்தும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 2021 ஜூன் 20-ம் தேதி மணிகண்டன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் […]
கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உடல்நலக்குறைவால் காலமானர். கோவை மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறையில் அமைச்சராக பதவி வகித்தார். மேலும், எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் மாநில துணைத் தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் என பல பொறுப்புகளில் பணியற்றியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தமிழகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமாகிய சி.த.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். […]
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்னமும் தனிந்த பாடில்லை. பலரை நிலைகுலைய செய்யும் இந்த பெருந்தொற்று பலரை காவுவாங்கி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், 3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார் திருமதி. சாகியா இனாம். இவர் ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. […]