அது மாத்திரை பொடி, போதைப்பொருள் அல்ல - வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார்!

அமைச்சர் சரத்குமார் ஒரு பொது இடத்தில் ஏதோ ஒரு பொடியைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

Hero Image

சென்னை : அண்மையில் சமூக வலைதளங்களில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஒரு பழைய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கக் காலையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குச் சென்று வந்த நிலையில், தனக்கு எதிராக இத்தகைய தப்பான வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் சரத்குமார் இதற்குத் தனது கடுமையான கண்டனத்தையும் விளக்கத்தையும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை வீடியோ குறித்து அமைச்சர் சரத்குமார் பேசுகையில், தங்களுக்குப் பாப்பா பிறந்து கொஞ்ச நாள் கழித்து, அதாவது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குடும்பத்தினர் மற்றும் குடும்ப நண்பர்களுடன் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக மைதானத்திற்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது தங்களது குழந்தை மாத்திரையை முழுங்காமல் துப்பிவிடுவதால், அவளுக்குக் கொடுப்பதற்காகத் தனது மனைவி ஒரு மாத்திரையைத் தூளாக அரைத்து (Crush) தண்ணீரில் கலந்து கொடுக்க முயன்றதாகவும், அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவைத்தான் தற்பொழுது தவறான முறையில் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அவ்வளவு போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், நண்பர்கள் சூழ்ந்திருக்கும் ஒரு ஐபிஎல் மைதானத்தில் இத்தகைய தவறான காரியங்களில் ஈடுபடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று குறிப்பிட்ட அமைச்சர், இத்தகைய போலி வீடியோக்கள் தனது மனதிற்குப் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும், தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், அமைச்சர் தனது விளக்கத்தில் குழந்தைக்கு மாத்திரை அரைத்ததாகக் குறிப்பிட்டிருந்த போதிலும், தற்பொழுது வைரலாகி வரும் அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சிகளில் குழந்தை யாரும் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரை பொடி, போதைப்பொருள் அல்ல - வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சரத்குமார்!