3 மாத 'லிங்க்டின் பிரீமியம்' இலவசம் - ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர் இதுதான்!

வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில்முறை ரீதியாகத் தொடர்புகளை விரிவாக்க விரும்புபவர்களுக்கு லிங்க்டின் பிரீமியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Hero Image

டெல்லி : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'ஏர்டெல் இன்சைடர்' (Airtel Insider) என்ற புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 2,997 ரூபாய் மதிப்புள்ள 3 மாதங்களுக்கான 'லிங்க்டின் பிரீமியம்' (LinkedIn Premium) சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலை தேடுபவர்கள் மற்றும் தொழில்முறை நெட்வொர்க்கிங் செய்பவர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய இந்த பிரீமியம் சேவையின் மூலம் இன்மெயில் (InMail) வசதி, சுயவிவரப் பார்வை விபரங்கள் மற்றும் லிங்க்டின் லேர்னிங் படிப்புகளைப் பயனர்கள் இலவசமாக அணுக முடியும்.

லிங்க்டின் பிரீமியம் சலுகை மட்டுமின்றி, 850 ரூபாய் மதிப்புள்ள 2 மாதங்களுக்கான 'ஈசிடைனர் பிரைம்' (EazyDiner Prime) மெம்பர்ஷிப் சந்தாவையும் ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. இந்தச் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் முன்னணி உணவகங்களில் சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக உணவுச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலியின் (Airtel Thanks App) 'ரிவார்ட்ஸ் & ஓடிடி' (Rewards & OTTs) பிரிவின் கீழ் நேரடிப் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் தற்பொழுது காண்பிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த சலுகைக்கான முழுமையான தகுதி வரம்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏர்டெல் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.

3 மாத 'லிங்க்டின் பிரீமியம்' இலவசம் - ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர் இதுதான்!