முதல்வர் ஆதரவு இல்லனா நிதியமைச்சராக செயல்பட முடியாது – பழனிவேல் தியாகராஜன்

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என நிதியமைச்சர் பேட்டி.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என நிதியமைச்சர் பேட்டி.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதித்துறையில் செயல்பட ஊக்கமும், ஆதரவும் முதலமைச்சர் மட்டுமே வழங்குகிறார். முதல்வர் ஆதரவு இல்லையென்றால் நிதியமைச்சராக செயல்பட முடியாது. நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடியில் பல தவறுகள் நடந்துள்ளது.

திமுக ஆட்சியில் தவறுகள் கலையப்பட்டு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் தவறான முறையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் மக்கள் கேட்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க குடும்பத்தின் உண்மைத் தன்மையையை விசாரித்து வருகிறோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் தமிழகத்தின் நிதி நிலைமை சரியான பின் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவி உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.