மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ,தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என நிதியமைச்சர் பேட்டி. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதித்துறையில் செயல்பட ஊக்கமும், ஆதரவும் முதலமைச்சர் மட்டுமே வழங்குகிறார். முதல்வர் ஆதரவு இல்லையென்றால் நிதியமைச்சராக செயல்பட முடியாது. நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடியில் பல தவறுகள் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் தவறுகள் கலையப்பட்டு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் […]
அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார் என பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பேட்டி. மதுரை விமான நிலையத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் […]
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அமைச்சர் தகவல். தமிழக சட்டபேரவையில் தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் […]
சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன் ? என ஈபிஎஸ் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து வருகிறார். அப்போது, சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச அதிமுக அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர்வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையிலிருந்து இன்று நிதியமைச்சர் அவர்களது பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று […]
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தமிழக அரசின் முழுமையான பட்ஜெட்டை குறித்து உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தனது […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து வருகிறார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. காகிதமில்லா சட்டமன்றம் திட்டத்தின் கீழ் கணினி மயமாக்கப்பட்டுள்ள ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற […]