ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, சுற்றுசூழல் அனுமதியின்றி விதிமீறி காட்டியதால் ஏன் வழக்கு தொடரக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2021 நவம்பர் 19-ல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நோட்டீஸுக்கு தடை விதிக்க கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீஎதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.