மும்பை : தமிழை போலவே ஹிந்தியிலும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை இல்லாமல் இருக்குமா என்ன? சண்டைகள் வந்தாதானே அது பிக் பாஸ் வீடு. அப்படி பரபரப்பான சம்பவங்கள் எதாவது நடந்தால் தான் பார்வையாளர்களுக்கும் ஒரு விறு விறுப்பாக இருக்கும். எனவே, பரபரப்பை அதிகமாக்கி டி.ஆர்.பி யை எகிற வைக்க ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய சண்டை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. சண்டை […]
Sadhguru: “பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது” என சத்குரு பாராட்டியுள்ளார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான […]
ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று (டிச. 22) சிறப்பாக நடைபெற்றது. இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக , காசி […]
கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் […]
உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன. வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை […]
“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால், நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய […]
அருள்மிகு சோமேஸ்வரர் FPO புது சாதனை ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான திரு. இரஞ்சித் அவர்கள் கூறுகையில், “ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத்தரகர்களுக்கு எங்களுடைய விளைப்பொருட்களை விற்று வந்தோம். அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார். இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் […]
27 நாடுகள்,27,200 கி.மீ பயணம்,593 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு,ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார்.இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் 593 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் […]
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தானை கமாண்டிங் ஆஃபிசர் அசோக் ராய் தொடங்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோவையில் (ஜூன் 5) நடைபெற்றது.ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டிங் ஆஃபிசர் காமோடர் அசோக் ராய் அவர்கள் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஆர்.கே. ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு […]
பெங்களூருவில் இருந்து கோவை வருகை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர். ’பெடல் புஸ்ஸர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டனர். […]
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. பட்ட படிப்பு: தாணிக்கண்டி,முள்ளாங்காடு,பட்டியார் கோவில்பதி,மடக்காடு, மத்வராயபுரம்,ஆலாந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 23 மாணவிகள் மற்றும் 4 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த இம்மாணவர்கள் ஈஷாவின் உதவியுடன் பொறியியல், நர்சிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் […]
ஆன்டிகுவா & பார்படா, டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் ஆகிய 4 கரீபியன் நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்கள் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் வரலாற்று தருணத்தில் பங்கெடுத்தனர். ’சோகா இசையின் அரசன்’ (King of Soca) என புகழப்படும் சர்வதேச பாடகர் திரு.மெச்சல் மோண்டனோ (Machel Montano) இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் தனது இசையின் மூலம் மண் வள பாதுகாப்பு […]
ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நேற்று இரவு (மார்ச் 8) கோலாகலமாக நடைபெற்றது. ஆதியோகி முன்பு நடந்த இந்த கலை நிகழ்ச்சியில் தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, முள்ளாங்காடு, வெள்ளப்பதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர். தங்களுடைய பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து அரங்கை அதிர செய்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, […]
கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் […]
ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகளில் ஜனவரி 2, 3 தேதிகளில் நேரில் பங்கேற்கலாம். ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை […]
ஈஷாவில் உள்ள லிங்க பைரவியில் நவராத்திரி திருவிழா அக்.7-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அக். 8, 9, 10, 12, 15 ஆகிய தினங்களில் சம்ஸ்கிரிதி மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் லிங்க பைரவி யூ- டியூப் சேனலில் மாலை 6.45 மணிக்கு நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படும். (https://www.youtube.com/c/LingaBhairavi) . இதில் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வயலின் இசை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும். இதுதவிர, அக்.9, 10, […]
விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என சத்குரு தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். கோவை:இந்த தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாம் இந்த ‘சார்வரி’ வருடத்தில் இருந்து ‘பிலவ’ வருடத்திற்குள் கால் […]
கோவையில் வாக்களித்த பிறகு சத்குரு பேட்டி அரசாட்சியை வன்முறை மற்றும் ரத்தம் சிந்தாமல் மாற்றிக் கொள்கின்ற நடைமுறை தான் தேர்தல், இதில் மக்கள் அனைவரும் சாதி, மதம், கட்சி பார்க்காமல் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். தமிழகம் முழுவதும் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் இன்று (06-04-2021) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சத்குரு வாக்களித்தார். […]
கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா இன்று (மார்ச் 8) கோலாகலமாக தொடங்கியது. இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா மார்ச் 8 முதல் 10 வரை நடக்க உள்ளது. முதல் நாளான இன்று பிரபல ஹிந்துஸ்தானி பாடகி திருமதி.கவுசிகி சக்ரபோர்த்தி அவர்களின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. சங்கீத் […]