#BREAKING: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழக அரசு

The Government of Tamil Nadu has decided to provide a special temporary overtime pay to celebrate Pongal...

பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.