#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை
தீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு.
தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னையில் அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குறது போக்குவரத்துத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.