கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழா […]
மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோயில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வெர்ச்சுவல் […]
சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம். சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் […]
தீபாவளி பண்டிகையை சிறப்பாக பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு. தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க […]
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னை, தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், தமிழகம் முழுவதும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உள்பட 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நக்கரங்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக […]
தீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக […]
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேரூந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், சேலம், பெங்களுருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும், ஏப்ரல் 6, 7ல் தினமும் இயக்கப்படும் 2,225 பேரூந்துகளுடன் 2,115 சிறப்பு […]
மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று நாராயண பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 39,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார். மேலும் இந்தாண்டு அரசு […]
தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றது.இந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை […]
தேர்தலில் வாக்களிக்க வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று சென்னையிலிருந்து 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 18 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் தேர்தலில் வாக்களிக்க வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று சென்னையிலிருந்து 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளில் இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கின. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இந்நிலையில் இன்று 3 ஆயிரத்து 741 […]