தீபாவளி பண்டிகையை நேற்று மக்கள் மற்றும் கோலாகலமாக புது உடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான சிவகுமாரின் குடும்பமும், ராதிகாவின் குடும்பமும் இந்த முறை தீபாவளியை இணைந்து கொண்டாடியுள்ளனர். அட ஆமாங்க.. நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ராதிகா, பிருந்தா ஆகியோர் இந்த தீபாவளியை ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ராதிகா குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி புல்லட் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அதற்கான வீடியோவை நடிகை ராதிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் […]
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மொத்தமாக 10518 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தீபாவளி தினம் என்பதால், வெளியூரில் வேலைபார்க்கும் நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முதல் புறப்பட்டனர். அதனால் சென்னை, காஞ்சிபுரம் எல்லையில் வாகன நெரிசல் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது அதுகுறித்து […]
தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த […]
வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை என்றாலே, ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த வருடம் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் முடியாததால் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. தமிழில் சிவகார்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்துள்ள […]
ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். என தென்னக ரயில்வே துறை மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது. தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு தான் நம் நினைவில் வந்துவிடுகிறது. அதில் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பேருந்து, ரயில் என […]
பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்கள் அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை என்றாலே இந்தியா முழுக்க கொண்டாட கூடிய, மிக்பெரிய பண்டிகை என்றே சொல்லலாம். ஆம், இப்போவே மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. இந்த ஆண்டில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள். அவர்கள் குறித்து சிறிய பார்வை….. Ranbir Kapoor And Alia Bhatt […]
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வரையில் தீக்காயங்களுக்கு சிகிச்சைக்கான மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டப்பட உள்ளது. இதற்கான புத்தாடை விற்பனை , பட்டாசு விற்பனை என படு ஜோராக மக்கள் தயாராகி வருகின்றனர் . அதற்கேற்றாற் போல, அரசும் பாதுகாப்பான தீபாவளிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
தீபாவளி பண்டிகையை சிறப்பாக பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு. தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க […]
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு. அமைச்சர் சேகர் பாபு சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்தார். இந்த நிலையில், 47-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என்றும், 21-ம் தேதி வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் மக்கள் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட காத்துள்ளனர். இவர்களை போல சினிமா பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில், இந்த வருடம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி வருகிறது. எனவே இந்த வருடம் தலை […]
தீபாவளி பண்டிகைக்கு சுவையான அதிரசம் செய்யும் முறை. பண்டிகை நாட்கள் என்றாலே நமது வீடுகளில் வகைவகையான பலகாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது இந்த பதிவில் அசத்தலான மொறு மொறு என அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் வெல்லம் – 2 கப் நெய் – ஒரு ஸ்பூன் […]
குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு. விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்தில் சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிவாயு மீதான வரியை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்களின் பயன்படும் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் ஆகும் எரிவாயு மீதான வாட் வரி 10% குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், இமாச்சலப்பிரதேசத்துக்கு […]
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BREAKING : தமிழக அரசு […]
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது அம்மாநில அரசு. புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு ரூ.6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. சென்னை, தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர், தமிழகம் முழுவதும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் உள்பட 16,888 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நக்கரங்களில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக […]
தீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக […]