டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை இருக்கிறது. பாஜக 07 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக ஆட்சியமைக்க இருப்பதால் கட்சி தொண்டர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.
unknown nodeஇந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் பதவியில் அமரும் நிலையில், பல தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி பதிவிட்டுள்ளார். அதில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைய உள்ளதற்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு வகுப்புவாத அரசியல் தடையாக இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநில உரிமைகள் மற்றும் நாட்டு மக்களின் விருப்பங்கள், நாட்டின் நலனை பலப்படுத்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.