குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, […]
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெட்ரா நிலையில், காசி தொகுதி பாஜக வேட்பாளர் தோல்வி. உத்தர பிரதேச மாநிலம் மேலவை தேர்தலில் (UP MLC தேர்தல் 2022) காசி தொகுதி பாஜக வேட்பாளர் சுதாமா படேல் தோல்வியை சந்தித்துள்ளார். அங்கு சுயேட்சை வேட்பாளர் அன்னபூர்ணா சிங் 4,234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி (SP) வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஆவடி – மாஃபா பாண்டியராஜன், மதுரவாயல் – பென்ஜமின், விழுப்புரம் சிவி சண்முகம், ராயபுரம் – ஜெயக்குமார், கடலூர் – எம்சி சம்பத், சங்கரன்கோயில் – ராஜலக்ஷ்மி, ஜோலார் பேட்டை – கேசி வீரமணி, ராசிபுரம் – சரோஜா, திருச்சி – கிழக்கு, வெல்லமண்டி – நடராஜன், ராஜபாளையம் – ராஜேந்திர பாலாஜிஆகிய அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக […]
சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியிடம் தோல்வி. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் […]
அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 125 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்று 10 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ளார். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். […]
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார். நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக 158, அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 75,511 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. தமிழக சட்டமன்ற தேர்த்லின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலை பெற்று பல இடங்களில் வெற்றி அறிவித்து வருகின்றனர். அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதால், தமிழகத்தில் முக ஸ்டாலின் தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறார். திமுகவின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், தெரிவித்து வருகின்றனர். […]
ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி என திமுக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு கட்டங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வெற்றி பெட்ரா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும், தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. திமுக நேரடியாக 124 […]
சட்டமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை பெற்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களமிறங்கியிருந்தது. சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் […]
நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மாறி, மாறி முன்னிலையில் பெற்று வந்த நிலையில். மம்தா வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 216 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது. இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் […]
விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணிநேரமாக நிறுத்திவைப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சில சுற்றுகளை கடந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது. முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால், அந்த இயந்திரத்தில் உள்ள […]
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகள் முடிந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 88 இடங்களிலும் […]
அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து […]
மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது. அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரி […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்றில் வெளியாகியுள்ள தகவலின்படி, திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. அதுபோல், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 16,136 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராம் 6,471 வாக்குகள் பெற்று பின்னடைவை […]
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில் சீமானுக்கு பின்னடைவு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 129 இடங்களில் திமுகவும், 103 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பின்னடைவையே சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை. தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி 47, திமுக கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் குறிப்பாக கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் […]
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கொரோனா தொற்று காரணமாக மாற்றம். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கிய நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அத்தொகுதியில் புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக கண்ணன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் […]
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து நோய் பரவலை கருத்தில் கொண்டு […]