சென்னை :ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர், தற்போது இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்திருந்தது.
இருப்பினும், இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குண்டாஸை ரத்து செய்யக்கோரி மனுதாரர்கள் தரப்பில் வாதத்தை முன் வைத்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை வெளியிட்டது.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
