போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால், புதிய காவல் நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பள்ளிக்கரணை மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் பலர் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில் அதிக போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படக்கூடிய இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டர் […]
ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கடற்படை அதிகாரிகள் அளவிலான பணிகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராணுவத்தில் களத்தில் இறங்கி சண்டையிடாத பணிகளில் பெண்களுக்கு நிரந்திர பணி தர ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பெண்களுக்கு கடற்படையில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் […]
வல்லூர் தேசிய அனல் மின்நிலை நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நிலத்தில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட தடை விதித்து , வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி கடந்த மார்ச்சுடன் முடிவடைந்ததால் தொடர்ந்து ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது. இதனால் வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.