துணை முதலைச்சர் உதயநிதியின் தனி செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.!
தமிழ்நாடு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சருக்கு அடுத்தபடியான உயர் பொறுப்பு என்பதால், முதலைமைச்சருக்கு தனி செயலாளராக தலைமை செயலாளர் இருப்பது போல துணை முதலமைச்சருக்கும் தனி செயலாளர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.
இதனை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தான் துணை முதலமைச்சரின் தனி செயலலாளராக நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனி செயலாளராகவும், உயர்கல்வித்துறை புதிய செயலாளராக கோபால் ஐஏஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாராக இருந்த கே.நந்தகுமார் ஐஏஎஸ் மின்சாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மின்சாரத்துறை செயலாளராக இருந்த ராஜேஷ் லக்கானி தற்போது வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025