மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு!!

This news gives information about Appeal to the High Courts to postpone Lok Sabha elections !!

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

unknown node

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.சித்திரை திருவிழாவை ஒட்டி மதுரையில் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் பார்த்தசாரதி முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணை என்று  உயர்நீதிமன்றக்கிளை தெரிவித்துள்ளது.