கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசை பட்டியல் வெளியீடு – சென்னை ஐஐடி முதலிடம்!

Chennai IIT has been selected as the best educational institution in the country by the Central Government.

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு.

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடம் பிடித்த நிலையில், வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகம் தரவரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்தியாபீடம் பல்கலைக்கழகம் நான்காவது இடம் பெற்றுள்ளது.

இதுபோன்று சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 3வது இடத்தில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தில் உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளுக்கான பட்டியலில் மாநில கல்லூரி 5வது இடத்திலும், லயோலா கல்லூரி 6வது இடத்திலும் உள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.