சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் […]
சென்னை ஐஐடி-ல் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், […]
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக […]
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு […]
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதனால்,8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ […]
சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் […]
இந்தியாவின் புத்தாக்க கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. நடப்பாண்டில் 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசை பட்டியலுக்கு விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தேசிய அளவிலான தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது. […]
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த நவ.20 ஆம் தேதியன்று நடைபெற்ற சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்,சென்னை ஐஐடி யில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ் தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் […]
சென்னை:ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் […]
நிபுணர் குழு புளியந்தோப்பு வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை முதல்வரிடம் அளிக்க உள்ளனர். சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு […]
ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் பணியில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில், கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு, சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றி திரிய கூடிய கால்நடைகளை முறையாக கவனிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஐஐடி வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் 49 நாய்கள் இறந்துள்ளன. நாய்கள் […]
நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு. தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் […]