ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,24,657 பேர் கைது.!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில்

நாடு முழுவதும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 1,24,657 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.38,54,144  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.