#LIVE: கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தமிழக முதல்வர் உரை.!

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறோம்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நோய் பரவலை தடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

3 அதிகாரிகளுக்கு உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுப்பதற்காக 3  ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கபட்டுள்ளது. அதில், மக்கள் தங்களுடைய பிரச்னைகளை தெரிவிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம் பரவல் இருப்பதற்கு காரணம், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தெருக்கள் குறுகலாக இருப்பதும், பொதுக் கழிப்பறை மூலமும் நோய் அதிகம் பரவுகிறது.

சென்னையில் நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை மாதிரிகளை சேகரித்து வருகிறது.

அரசின் நடவடிக்கை காரணமாக சென்னையில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் 4000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

50 பரிசோதனை நிலையங்கள் மூலம் ஒரு நாளுக்கு 12 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதில் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இவசமாக வழங்கப்படும்.