மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

Union Finance Minister Nirmala Sitharaman today held consultations with state chief ministers and finance ministers.

மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை.

மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சா்கள் பங்கஜ் சௌதரி, பகாவத் காரத், அமைச்சா் செயலா்கள், மாநில முதல்வா்கள், நிதியமைச்சா்கள், தலைமைச் செயலா்கள், நிதித் துறை செயலா்கள் உள்ளிட்டோா் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனா்

இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அதற்கு சாதகமான தொழில் சூழல்களை மாநிலத்தில் உருவாக்குவது தொடா்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.