ரயில் விபத்து: மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி காட்டம்.!

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Train Accident - Rahul Gandhi

சென்னை :திருவள்ளூர் ரயில் விபத்தில் பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். ஒடிஷா ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளது.

பல விபத்துகளில், பல உயிர்கள் பறிக்கொடுக்கப்பட்டாலும் மத்திய அரசு எந்த பாடமும் கற்கவில்லை என விமர்சித்த அவர், இதற்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், மத்திய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என ராகுல் காந்தி கட்டமாக பதிவிட்டுள்ளார்.

unknown node