அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு ரயில் விபத்து ஏற்பட்டது ஏன செய்திகள் வெளிவந்தாலும் நம் மனதைப் பதற வைத்து வருகிறது. அந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து சில இடங்களில் அவ்வப்போது, ரயில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அசாமில் இன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அசாமில் அகர்தாலா விரைவு ரயில் திபலாங் பகுதியில் தடம்புரண்டு விபத்து […]
சென்னை : நேற்று (அக்டோபர் 11) இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து கவரப்பேட்டை செல்லும் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த மைசூர் (கர்நாடகா) – தர்பங்கா (பீகார்) செல்லும் பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயில் மீது விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. சரக்கு ரயில் முழுவதும் காலியாக இருந்ததால் விபத்தின் அதிர்வு மொத்தத்தையும் சரக்கு ரயில் பெட்டி உள்வாங்கி கொண்டு ரயில்வே தண்டவாளம் குறுக்கே விழுந்துவிட்டது. இல்லையேல் பெருமளவு […]
டெல்லி : கடந்த வருடம் ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இந்த ரயில்கள் மீது எதிர் திசையில் வந்தஹவுரா அதிவிரைவு ரயில் மோதிய கோர விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்தை அடுத்து, இந்திய ரயில்வே துறை பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. விபத்து குறித்து […]
சென்னை : நேற்று இரவு சென்னையில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது , மைசூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பற்றின. 6 ரயில்பெட்டிகள் தடம்புரண்டன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் காயங்கள் ஏற்பட்டவர்கள் சென்னை ஸ்டான்லி […]
சென்னை : திருவள்ளூர் ரயில் விபத்தில் பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். ஒடிஷா ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளது. பல விபத்துகளில், பல […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா சென்ற விரைவு ரயில் மோதியதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன, மேலும் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசகமாகியது. விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது, விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன […]
சென்னை : நேற்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் தர்பங்கா நோக்கி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி – கவரப்பேட்டைக்கு இடையே அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அங்கு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி 6 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்தன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே […]
உத்தரபிரதேசம் : கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில் சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயிலின் குறைந்தது 12 பெட்டிகள் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் இன்று தடம் புரண்டன. இதனைத்தொடர்ந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும், 25 பேர் காயமடைந்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஏசி பெட்டிகள் மோசமான நிலையில் உள்ளதால் குறைந்தது 12 […]
மேற்கு வங்கம்: பேரிடர் குழு, மருத்துவ குழுக்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் பார்த்து பேசினேன் – மே. வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, அகர்தலா – சீல்டா இடையேயான பான்சிதேவா பகுதி ரயில் பாதையில், நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துகுள்ளானது. இந்த ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், […]
மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்பொழுது, இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளைப் பற்றிய தகவல்களை குடும்பங்கள் தொடர்பு கொள்ள உதவும் ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள், […]
மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழு, மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதில் பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது. விபத்தில் ஐந்து பயணிகள் இறந்துள்ளனர், 20-25 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. #WATCH | “Five […]
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் எனபவருக்கும், சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகள் கஸ்தூரிக்கும் 8 மாதம் முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கஸ்தூரி 7 மாத காலம் கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் வளைகாப்பு நிகழ்வு நடத்துவதற்காக சுரேஷின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு நேற்று இரவு […]
Train Accident: 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஆந்திர மாநில ரயில் விபத்திற்கு ஓட்டுனர்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியை கண்டு களித்ததால் ஏற்பட்ட கவனச் சிதைவே விபத்திற்கான காரணம் என நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். Read More – மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 34 அமைச்சர்கள்! சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று […]
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய அந்த கிராமத்தை சேர்த்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்து ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்காசி மாவட்டம் புளியரை கிராம பகுதியில் ‘எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், நேற்று முந்தினம் நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தடம் புரண்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. சமீபகாலமாக அடுத்தடுத்து ஏற்படும் ரயில் விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் […]
இந்தோனேசியாவில் இருக்கும் முக்கிய தீவுகளில் ஒன்றான ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 28 பேர் காயமடைந்தனர் என்று அங்கிருந்த அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிகாலெங்காவில் உள்ள நெல் வயல்களுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை 6:03 மணிக்கு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிப் பயணித்த […]
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பலாசா ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி […]
சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை ஜின்சங்கில் உள்ள ரயில்வே ஊழியர்களின் மீது பயணியர் ரயில் ஒன்று மோதியுள்ளது. இதில் 9 ரயில்வே கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரிலிருந்து ஜெயியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்கோ நகருக்கு சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த காரணம் வெளியாகாத நிலையில் இந்த சம்பத்தை குறித்த […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு ஸ்டேஷனுக்கு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் மீதி சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர்-சென்னை வழித்தடத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பிரச்சனையை சரி செய்ய, ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநில டெக்னீசியன் பர்வேஸ் குமார் ஆகிய இருவரும் கொட்டும் மழையில் சென்று சிக்னல் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் உறங்கிய கொண்டுஇருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த பகுதியில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் […]