பீகார் : தீபாவளி, சாத் பண்டிகையின் போது பயணிகளின் நெரிசலைக் குறைக்க, கோவை – பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையில் இருந்து வரும் 26ம் தேதி, நவம்பர் 2, 9 மற்றும் 16ம் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக பாராவுனியில் இருந்து வரும் 29ம் தேதி, நவம்பர் 5, 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. ரயில் […]
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், உருவாகவுள்ள புயலுக்கு டானா எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்.-24 அன்று இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் அக்.-25ம் தேதி அதிகாலையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை […]
புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே […]
சென்னை : திருவள்ளூர் ரயில் விபத்தில் பாக்மதி ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார். ஒடிஷா ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்துள்ளது. பல விபத்துகளில், பல […]
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது விரைவு ரயில் நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானது. அதாவது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா சென்ற விரைவு ரயில் மோதியதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன, மேலும் சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசகமாகியது. விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது, விபத்தில் உருக்குலைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன […]
டெல்லி : இந்தியன் ரயில்வேயில் உள்ள ரயில் பெட்டி இருக்கைகள் அனைத்தும் பெரியவர்கள் வசதிக்கேற்ப படுக்கை வசதி அமைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் பச்சிளம் குழந்தைகளை அழைத்து செல்லும் தாய்மார்களுக்கு எதுவாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த இந்தியன் ரயில்வே துறை தற்போது புதிய முயற்சியை கொண்டுவந்துள்ளது இதுகுறித்து இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பாஜக எம்பி சுமர் சிங் சோலங்கி இந்தியன் ரயில்வேயில் தாய்மார்கள் செல்லும் வகையில், படுக்கை வசதி ஏற்படுத்தி தருவது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு […]
ஜார்கண்ட் : சக்ரதர்பூர் அருகே ஹவுராவில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் தடம்புரண்டது. ஹோவாரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ஜாம்ஷெட்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் படபாம்பூ அருகே அதிகாலை 3.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. தடம் புரண்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில், 2 பேர் பலி, 20 பேர் […]
இந்தியன் ரயில்வே : இந்திய ரயில்வே வாரியத்தின் அறிவிப்பின் படி ஜெஈ (JE), டிஎம்எஸ் (DMS) மற்றும் சிஎம்ஏ (CMA) போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை தொடர்பான அனைத்து விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 30-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 29-08-2024 காலியிட விவரங்கள் : இரசாயன மேற்பார்வையாளர் […]
IRCTC : இந்தியன் ரயில்வேயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து அதனை பயண நேரத்தின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் , நேரத்திற்கு தகுந்தாற்போல அதன் சேவை (அபராத) கட்டணம் வசூல் செய்யப்பட்டு மீதம் உள்ள டிக்கெட் பணம் பயனர்களுக்கு திரும்பி தரப்படும். அப்படி வசூலித்த சேவை கட்டணம் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் 1,229 கோடியாக உள்ளதாம். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை (RTI) […]
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே. டிக்கெட் புக் செய்ய ஒரு ஆப், புகார்களை பதிவு செய்ய இன்னொரு ஆப், ரெகுலர் டிக்கெட் எடுக்க ஒரு ஆப், ரெயில் நிலை, பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் என ரெயில்வேயுடன் சேர்த்து பல ஆப்ஸ் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய Rail Connect ஆப் உள்ளது. இது மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் யுடிஎஸ் (UTS), ரெயில் […]
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோவை இந்திய ரயில்வே 2023 இல் அறிமுகப்படுத்துகிறது. பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு, இந்திய ரயில்வே வந்தே மெட்ரோவை அடுத்த அண்டு 2023 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறினார். இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோ ரயிலை […]
ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவனுக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே-நன்றி தெரிவித்த மாணவன். ஏக்தா நகர் ஸ்டேஷனில் இருந்து வதோதரா ஸ்டேஷனுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவர் ஒருவருக்கு இந்திய ரயில்வே வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்தது. கனமழை காரணமாக ஏக்தா நகர் மற்றும் வதோதராவை இணைக்கும் ரயில் பாதையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக சத்தியம் காட்வி கூறினார். […]
ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில்,ரயில்களில் பயணம் […]
ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் இருந்து ஓணம் சிறப்பு பாரத் தர்ஷன் ரயிலை இயக்குகிறது. இந்த இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 26 வரை இயக்கப்படும். 12 நாள் பயணத்திற்கான அதன் மொத்த செலவு ரூ .12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் […]
பண்டிகை காலங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வசதியாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களை இயக்கபோவதாக இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே வாரியத் தலைவர் யாதவ் கூறுகையில், மாநில அரசுகளின் தேவைகள் மற்றும் தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து தினசரி பயணிகள் ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே முடிவு செய்துள்ளது என்று கூறினார். மேலும், அதிக தேவை உள்ள பாதைகளில் தேசிய டிரான்ஸ்போர்ட்டரால் அறிமுகப்படுத்தப்பட்ட குளோன் ரயில்களின் இயக்கப்படும் என்றார். தற்போது, […]
44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில், சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூன்றாவது டெண்டர் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்களுக்கான இந்த டெண்டர் நான்காவது முறையாகும். நவம்பர் 17 ஆம் தேதி டெண்டர் […]
செப்டெம்பர் 21 முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கம் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது இயங்கும் 310 சிறப்பு ரயில்களுக்கு கூடுதலாக, வரும் 21ஆம் தேதி முதல் 20 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே நேற்று அறிவித்தது. ரயில்வே துறையில் குளோன் ரயில்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும் . இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 19 முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் முழுவதும் முன்பதிவு […]
இன்று முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் 40 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதியிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ரயில் சேவைக்கான வரையறையை மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாம். அதன்படி சரியான நேரத்தில் ரயிலை இயக்க தவறினால் கடுமையான அபராதம் விதிப்பது, பராமரிப்பு தொகை என பல்வேறு விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளனவாம். தனியார் ரயில், ரயில் நிலையத்திற்கு தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்து விட்டால் அதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். 15 நிமிடம் தாமதமாக வந்தால் அது சரியான நேரத்தில் வராததாக கருதப்படும். ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்த தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு 512 ரூபாய் செலுத்த […]
உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது. ஹரியானா அருகில் உள்ள ஆரவல்லி மலை தொடர்களுக்கு இடையே சுமார் 1 கிமீ தொலைவிற்கு குகை அமைக்கப்பட்டு, அதில் இரண்டு அடுக்கு சரக்கு ரயில் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்து, அதில் எலெக்ட்ரிக் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது. உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து […]