விவசாய நிலத்தை வேட்டையாடும் வெட்டுக்கிளி கூட்டம்.! படத்தில் காண்பது நிஜத்தில் உண்மையானது.!

Default Image
  • சூர்யா நடித்த காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
  • குஜராத் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெருகி வரும் வெட்டுக்கிளி கூட்டத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்த காப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், அந்த படத்தில் சில காட்சிகள் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்கும். அந்நிலையில், படத்தில் உள்ள காட்சிகளில், விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது, அது காண்போரை பிரமிக்க வைத்தது.

இந்நிலையில் அதுபோன்ற நிகழ்வு தற்போது குஜராத் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெருகி வரும் வெட்டுக்கிளி கூட்டத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தாரட் கிராம வாசிகளை அச்சுறுத்தி புற்றீசலாய் பெருகி வரும் பூச்சிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஐநா.சபையின் உணவு மற்றும் வேளாண்துறை எச்சரிக்கை விடுத்த போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பூச்சிகளின் படையெடுப்பு பெருகி விட்டது. இப்போது இதை என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறார்கள் அப்பகுதி விவசாய மக்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்