குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை பதற வைத்து வருகிறது. அதில் 8 வயது பள்ளி சிறுமி ஒருவர் தனது வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து அதன் பிறகு உயிரிழந்துள்ளார். அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சபர் (Zebar) பள்ளியில் 3வது வகுப்பு பயின்று வருகிறார் 8 வயது சிறுமி கார்கி ரன்பரா. இச்சிறுமி நேற்று வழக்கம் போல […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பரவி வரும் HMPV தொற்று பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பரவி வரும் HMPV வைரஸ் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம். இந்த வைரஸ் […]
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்கண்ட இரு […]
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்கு வந்ததாக குஜராத் மாநில சுகாதாரத்துறை […]
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் […]
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை தொடர்ந்து, நேற்று 2-வது ஒரு நாள் போட்டி […]
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் […]
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில் நட்வர்பாய் மெத்தானியா (18 வயது) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும், அக்கல்லூரியின் விடுதியில் தங்கி தனது படிப்பை படித்துக் கொண்டு வருகிறார். இவரையும், இவருடன் சேர்த்து 10 மாணவர்களையும் கடந்த சனிக்கிழமை (நவ-15) அன்று அதே கல்லுரி விடுதியில் இருக்கும் சீனியர்கள் ஒரு சிலர் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். வெகு நேரம், கிட்டத்தட்ட […]
குஜராத் : பொதுவாக, ஒரு மனிதன் இறந்த பிறகு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்வது வழக்கம். அதேபோல், நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளும் இறக்கும் போது, அவற்றை அன்புடன் வளர்த்தவர்களும் அவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறோம். நீங்கள் எப்போதாவது ஒரு காருக்கு இறுதிச்சடங்கு செய்வதை பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அட ஆமாங்க… குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் போலாரா என்பவர், 12 […]
சென்னை : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான […]
குஜராத் : கனமழை வெள்ள பாதிப்பால் இதுவரை மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,800 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்பால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநில அரசின் தரவுகளின்படி , குஜராத்தில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக பெய்யும் மழையளவில், 105 […]
குஜராத் : 4 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களைத் தொடர்ந்து மீட்பு பணியினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
குஜராத் : இன்று (ஆகஸ்ட் 10) உலகம் முழுக்க சிங்க தினம் (World Lion Day) கொண்டாடப்பட்டு வருகிறது. பூனை வகைகளில் மிக பெரிய மிருகமாக சிங்கங்கள் பார்க்கப்படுகிறது. சிங்கங்களில் குணங்களை அடிப்படையாக கொண்டு அதனை காடுகளின் அரசன் என அழைக்கப்படுகிறது. இந்த சிங்க தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சிங்கங்களில் அழகான புகைப்படங்களை பதிவிட்டு சிங்க தினம் பற்றிய பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில், உலக சிங்க தினத்தன்று, […]
குஜராத் : சண்டிபுரா (CHPV) என்கிற வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் 15 பேர் உயிரிழப்பு, 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சண்டிபுரா வைரஸ் குறித்த செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள வைரஸ் தொற்றுகளுக்கான ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, இது ஒரு தொற்று நோய் கிடையாது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது. […]
குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அகமதாபாத் வதோரா தேசிய நெடுஞ்சாலையில், அகமதாபாத் நோக்கி தனியார் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் எதிர்ப்பாரா விதமாக டயர் வெடித்த காரணத்தால் பழுதுநீக்கம் செய்வதற்காக சிகோத்ரா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது. அப்போது பேருந்தின் பின்புறம் பயணிகள் நின்று கொண்டு இருந்ததாக […]
குஜராத் : பகுதியில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து தண்ட் மாவட்டத்தின் சத்புதாரா காட்டில் கவிழ்ந்ததில் 2 குழந்தைகள் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பயணி ஒருவர் தனது ஜன்னலுக்கு வெளியே உள்ள காட்சியை வீடியோ எடுத்து கொண்டு இருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்து வீடியோவும் பதிவானது. குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் உள்ள சத்புரா காட் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து […]
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு இந்த முடிவு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூடுதல் ஆறு மாதங்களுக்கு அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான DA வித்தியாசம் சம்பளத்துடன் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குஜராத் : ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு பள்ளி மாணவிகள், திடீரென கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஒரு வெள்ளை நிற ஆம்னி வேனில், ஒரு சிறிய தெரு வழியாக செல்வதைக் காட்டுகிறது. வேகமாக செல்லும் அந்த ஆம்னி வேனின் பின் வழி டோர் எதிர்பாராத விதமாக […]
குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் “செத்த எலி” இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். “Dead rat found in sambar at Devi Dhamasa Center, Nikol, Ahmedabad”#Nikol #Ahmedabad #Gujarat #Rat #Sambar #Dosa #FSSAI […]
PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள […]