சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு உத்தரவு. எரிமேலி மற்றும் மணிமலை பகுதிகளில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சமரிமலை விமான நிலையம் அமைகிறது. செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. சபரிமலைக்கு […]
முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நிலம் கையகப்படுத்தப்பட்டதில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டை திரும்ப பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டை திரும்ப பெறாவிடில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் போலி ஆவணங்கள் காண்பித்து இழப்பீடு பெற்றதாக அவதூறு வழக்கு […]
என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கும் முயற்சி பலிக்காது என்றும்,கையகப் படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி.மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் கையகப்படுத்தப் படவுள்ள நிலங்கள் கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதைந்து கிடக்கும் பூமியாகும் என்றும்,இந்த நிலங்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுக்கக் கூடியவை.அத்தகைய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழிக்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே வீடு கட்டும் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான […]
அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. ராமர் கோவில் அமைய உள்ள இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தன்னிபூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாநில அரசு தெரிவித்துள்ளது. அயோத்தியில் பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய முடிவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அயோத்தி வழக்கில் டெல்லி உச்சநீதிமன்ற தலைமை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடிய பெண்மணி. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பி, விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி என்ற பெண்மணி. இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. எனினும் நிலத்தின் நடுவே மண்திட்டான […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. தனது நிலத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து கண்மணி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவரின் நிலத்தின் நடுப்பகுதியில் பாறைகள் உள்ளது. அந்த பாறையில் நடுவே கடந்த 10 நாள்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலை பாம்பு சென்றதாக […]
சூர்யா நடித்த காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. குஜராத் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெருகி வரும் வெட்டுக்கிளி கூட்டத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சூர்யா நடித்த காப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், அந்த படத்தில் சில காட்சிகள் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்கும். அந்நிலையில், படத்தில் உள்ள காட்சிகளில், விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது, அது காண்போரை பிரமிக்க வைத்தது. இந்நிலையில் அதுபோன்ற […]
ஜேப்பி நிறுவனத்தால் எப்.1 கார்பந்தயம் நடத்த பயன்படுத்தப்பட்டு வந்த நிலத்தின் மீதான குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேப்பி நிறுவனம் ரூ.600 கோடி பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக்ரா அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் குத்தகைக்கு பெற்ற ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் ஜேப்பி இன்டர்நேசனல் ஸ்போர்ட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட மைதானத்தில் எப்.1 கார்பந்தயம் 2011 முதல் 2013 வரை நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களுக்காக, எப்.1 போட்டி நடைபெறும் இடங்களில் இருந்து அந்த இடம் 2014-ம் […]
நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்த போது சரவணன் என்பவரின் நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது. இதனால் அந்த நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீதிகளிலும் ,சாலைகளிலும் தண்ணீர் சென்றது. மேலும் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் சென்றதால் நேற்று […]