கர்நாடகாவில் கடந்த மே மாதம்சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று எந்தக் கட்சியும் பெரும்பான்மை அடையாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த தேர்தலில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.
கர்நாடக அரசின் அமைச்சரவையில் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய தெரிகின்றது.இதையடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் தொடர் பரபரப்பு நீடிக்கின்றது.