கரையை கடந்தது ரெமல் புயல்…மேற்கு வங்காளத்தில் கொட்டும் கனமழை!
ரெமல் புயல் : மணிக்கு 135 கிமீ வேகத்தில் ரெமல் புயல் கரையைக் கடந்த காரணத்தால் மேற்கு வங்காளத்தில் மரங்களை வேரோடு சாய்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த மே 23-ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மே 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு, இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காலை 08:30 மணி அளவில் மத்திய வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.
புயலுக்கு ரெமல் புயல் என்று பெயரும் வைக்கப்பட்டு இருந்தது. மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசதிற்கு இடையே ரெமல் புயல் நேற்று (மே 26 ) இரவு கரையை கடந்தது. புயலின் காரணமாக மேற்கு வங்காளத்தில் இருந்த 8 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் இருந்த 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இந்த புயலானது, நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள சாகார் தீவுகளுக்கும், வங்கதேசத்தில் உள்ள கேப்புபாராவிற்கும் இடையே கரையே கடந்தது. புயல் கரையை கடக்கும் போது வங்கதேசத்திலும், மேற்கு வங்க மாநிலத்திலும் காற்று மணிக்கு 110-120 கிமீ வேகத்திலும், அதிகபட்சம் 135 கி.மீ வேகத்திலும் வீசியது.
இந்த புயலின் காரணமாக டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸில் இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. புயலில் 15 பேரைக் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுள்ளதாகவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம், மேற்கு வங்காளத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Several trees uprooted in Sundarbans, South 24 Parganas.
Heavy rain and gusty winds lashed several parts of West Bengal last night as Cyclone ‘Remal’ made landfall.#CycloneRemal pic.twitter.com/7ybYPzQYSo
— ANI (@ANI) May 27, 2024
#CycloneRemal | Visuals from Kolkata, #WestBengal where rainfall and wind lashes city leading to water logging. pic.twitter.com/LQ4H6n9WUf
— DD India (@DDIndialive) May 27, 2024