சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுநாள் (23-ஆம் தேதி) வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் மழை வெளுத்து […]
ஹவுரா : மேற்குவங்க மாநிலத்தில் ஹவுரா அருகே செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் 40.கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கொண்டிருந்த போதே திடீரென நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த பெட்டியிலிருந்த பயணிகள் தடம் புரண்டதால் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே, சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் நேரில் விரைந்து தடம் புரண்ட பெட்டிக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகளிலிருந்த […]
ஒடிஷா : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் லேட்டஸ்டான தகவல் ஒன்றை கொடுத்து இருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது […]
டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா […]
ஒடிசா : மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (அக்.25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே ஒடிசா – மேற்குவங்கம் (பூரி […]
மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]
ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டானா எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். நாளை இரவு அல்லது நாளை மறுநாள் (அக். 25ம் தேதி) அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நடப்பாண்டின் […]
கொல்கத்தா : கடந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுதுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் மற்ற இடங்களில் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால், சம்பவம் நிகழ்ந்த கொல்கத்தாவில் இன்னும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாமானிய […]
கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்ற சம்பவத்தை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். பயிற்சி மருத்துவர்கள் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் […]
கொல்கத்தா : கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துக்கல்லூரி, மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது , இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். தற்போது வரையில் […]
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தரப்பு, சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி பமீலா […]
கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் ராய், சிபிஐ வழக்கு விசாரணை வளையத்தில் இருக்கிறார். சந்தீப் ராய் மீது அதே கல்லூரியில் உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக கடத்திய புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அந்த புகாரில் […]
கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் நிகழ்ந்தது குறித்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு 3 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் ஓர் கருத்தரங்கு ஒன்றில் நடைபெற்ற இந்த கொடூர நிகழ்வில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த […]
கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார். கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் 20 நாட்களை கடந்தும் இன்னும் பணிக்கு திரும்பாமல் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டம் […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனை கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இந்திய மருத்துவர்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கொல்கத்தாவில் 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே நடந்த இந்த சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாமல் இருப்பதால் […]
கொல்கத்தா : பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு தற்போது வரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நேற்று மாணவர்கள் பேரணி, இன்று கடையடைப்பு, 20 நாட்களாக தொடரும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் என நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் […]
கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு […]
கொல்கத்தா : இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர பரிஷத் ( கட்சியின் மாணவர் அமைப்பு) தினமாக கொண்டாடி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு சத்ர பரிஷத் தினத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டாடவில்லை. அதற்கான காரணத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், […]