ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் […]
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு 5-வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ள நிலையில், புதுவை, […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதிகனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, நிர்வாக காரணங்களால் 9 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால்திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக, அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் (நவ.27ஆம் தேதி) புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், முன்னதாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் தற்பொழுது, நாகப்பட்டினத்திற்கு தெற்கே – தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது. இது தொடர்ந்து வடக்கு […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல் உருமாறினால், அந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது எனவும் முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துவிட்டது. இதன் காரணமாக இன்று (நவ.26) முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, சென்னை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த கனமழையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிவிப்பில் தகவலை தெரிவித்திருந்தது. புயல் உருவான பிறகு அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்படவுள்ளது. தற்போது நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்வதால் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 29 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்பொழுது வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 1,050 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 980 கி.மீ., நாகையில் இருந்து 880 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி […]
ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா, தீவிர புயலாக நள்ளிரவில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கையில் மணிக்கு 100-110 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், ஒடிசா […]
ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில், நேற்று மாலைக்குள் 5.84 லட்சம் […]
ஒடிசா : வங்கக்கடலில் உருவான அந்த டானா புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. அதன்படி, வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே […]
சென்னை : வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலை (21-10-2024) 5.30 மணி அளவில் மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதைத்தொடர்ந்து, அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுப்பெற்றது. மேலும், இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை டானா புயலாக வலுப்பெறக்கூடும். […]
ஒடிசா : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் (அக்.23) புயலாக […]
சென்னை: வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (10 மணி வரை) தமிழ்நாட்டில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, […]