தம்பதியர்களின் உறவில் விரிசல்.! முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போன்கள்.!

Default Image

தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறது என ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் ஸ்விச் ஆப் என்கிற அமைப்பு திருமணமான தம்பதிகளின் இடையே உள்ள உறவு பற்றிய ஆய்வு நடத்தியது. இதில் பெரும் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், தம்பதியர்களின் உறவில் விரிசல் ஏற்பட பெரும்பாலும், 88 சதவீத பங்கு ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கிறதாம். அதனை அதிகளவில் உபயோகப்படுத்தி பெரும்பாலானோருக்கு தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது வெகுவாக குறைந்துள்ளளது.

இதில் 84 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை விடுத்து தங்கள் துணையுடன் நேரம் செலவிட விருப்பம் என கூறியுள்ளனர். நமது இரண்டு கைகளை தாண்டி 3வது கையாக தற்போது உருவெடுத்து தவிர்க்க முடியாமல் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன் என்பது நிதர்சனமான உண்மை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்