ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு – பயங்கரவாதி ஒருவர் கொலை!

Security forces are conducting a search operation in Jammu and Kashmir. One terrorist was killed in a shootout with security forces at the time.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நத்தம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று நள்ளிரவு ரகசியமாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்துஅப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பயங்கரவாதி பிடிபட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறதாம். நேற்று இரவு 12 மணியளவில் தொடங்கிய துப்பாக்கிச்சூடு 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.